திருமுருகன் காந்தி மீது வழக்குக்கு மேல் வழக்கு

திருமுருகன் காந்தி மீது வழக்குக்கு மேல் வழக்கு
திருமுருகன் காந்தி மீது வழக்குக்கு மேல் வழக்கு

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது மூன்றாவதாக ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

2016 நவம்பர் மாதம் பிரதமர் மோடி கொண்டு வந்த பணமதிப்பு நீக்க உத்தரவை எதிர்த்து திருமுருகன் போராட்டம் செய்தார் என்று கூறி இன்று காலை காவல்துறையினர் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புழல் சிறையில் உள்ள திருமுருகன் காந்தி மீது நேற்று தேனாம்பேட்டை ஐஒசி அலுவலகத்தில் கல் வீசியது தொடர்பாக போலீசார் ஒரு வழக்கைப் பதிவு செய்தனர்.

மெரினா கடற்கரையில் கடந்த மே 21 ஆம் தேதி தடையை மீறி முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த முயற்சித்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் மீது கடந்த 29 ஆம் தேதி குண்டர் சட்டம் பாய்ந்தது. இதனைத் தொடர்ந்து அவர் மீது தற்போது மூன்றாவது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசைக் கண்டித்துப் பேசியதால்தான் திருமுருகன் மீது வேண்டுமென்றே பல வழக்குகள் ஏவப்படுகின்றன என்று திரைத்துறையினர், சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 7 ஆண்டுகளாக மெரினா கடற்கரையில் 2009 ஆம் ஆண்டு மே 17 ஆம் நாள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இந்த ஆண்டும் மே 17 இயக்கம் சார்பாக மெழுவர்த்தி ஏந்தும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்திற்கு பிறகு மெரினாவில் கூடுவதற்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. இந்தத் தடையால் மே 17 இயக்கத்தினருக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. தடையை மீறி போராட்டம் நடந்ததால் திருமுருகன், டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதையடுத்து திருமுருகன் உட்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com