"விஜய்யின் வழிகாட்டுதல்படி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்" - மக்கள் இயக்க நிர்வாகி
விஜய்யின் வழிகாட்டுதல்படி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்
சென்னை பனையூரில் , விஜய் மக்கள் இயக்க மாவட்ட , மாநில நிர்வாகிகள் கூட்டம் அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது . 100 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தனித்தனியே தங்களது கருத்துக்களை ஆனந்திடம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த புஸ்ஸி ஆனந்த், " நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாவட்ட தலைவர்கள் , நிர்வாகிகள் , அணித் தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் விஜய் மக்கள் இயக்கத்தில் மாவட்ட தலைவர்கள் , தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் .
விஜய் உத்தரவிட்டபடி மாவட்ட தலைவர்கள் , அகில இந்திய விஜய் மக்கள் இயக்க தலைமைக்கு வேட்பாளர்கள் பட்டியலை சமர்பிப்பர். அதன் பிறகு விஜய் வழிகாட்டுதல்படி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர். தேர்தலில் ஒரே சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பாக , உதாரணத்திற்குதான் ஆட்டோ சின்னத்தை கூறினோம் " என்று கூறினார்.