அதே வார்டு... அதே வாக்குகள் - குலுக்கல் முறை பரிதாபங்கள்.. வெற்றியும்.. தோல்வியும்

அதே வார்டு... அதே வாக்குகள் - குலுக்கல் முறை பரிதாபங்கள்.. வெற்றியும்.. தோல்வியும்
அதே வார்டு... அதே வாக்குகள் - குலுக்கல் முறை பரிதாபங்கள்.. வெற்றியும்.. தோல்வியும்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்து வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். பல பகுதிகளில் ஓரிரு ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்ட நிலையில், சில வார்டுகளில் இரு கட்சியினரும் சமநிலையில் வாக்குகளைப் பெற்று திக்குமுக்காட வைத்தனர். இந்நிலையில், தேர்தல் விதிமுறைப்படி, குலுக்கல் முறையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

டி.கல்லுப்பட்டி பேரூராட்சி:

டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் 10வது வார்டு சுயேட்சை வேட்பாளர் பழனிச்செல்வி தண்ணீர்குழாய் சின்னத்தில் போட்டியிட்டு 284 வாக்குகளும், அதே வார்டில் திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் சுப்புலட்சுமியும் 284 என ஓரே மாதிரியான வாக்குகளைப் பெற்ற நிலையில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க இருவரையும் மைக்கில் அழைத்தபோது சுயேட்சை வேட்பாளர் பழனிச்செல்வி வராததால் திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

பழனி நகராட்சி:

திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சி 12வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சின்னதாய் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்ட முருகேஷ் ஆகியோர் தலா 500 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்ததால் குலுக்கல் முறையில் சீட்டு போட்டு எடுத்ததில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெற்றி என அறிவிக்கப்பட்டது.

திருச்செங்கோடு நகராட்சி:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் 13 வது வார்டில் குலுக்கல் முறையில் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அம்பேத்கர் நகர் பகுதி 13 வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ரேவதி மற்றும்சுயேச்சை வேட்பாளர் சினேகா இருவரும் 696 ஓட்டு என சமநிலையில் இருந்ததால தண்ணீர் குழாய் சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் சினேகா குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டார்.

பணகுடி பேரூராட்சி:

நெல்லை மாவட்டம் பணகுடி பேரூராட்சி 4 வது வார்டில் அதிமுக பாஜக இருவரும் தலா 66 வாக்குகள் பெற்றனர். இந்நிலையில், பாஜக வேட்பாளர் மனுவேல் குலுக்கல் முறையில் வெற்றிபெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் உஷா தோல்வியடைந்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com