ஒரே ஆண்டில் 600 விமானநிலையங்களை கட்ட முடியுமா?: திருநாவுக்கரசர் கேள்வி

ஒரே ஆண்டில் 600 விமானநிலையங்களை கட்ட முடியுமா?: திருநாவுக்கரசர் கேள்வி
ஒரே ஆண்டில் 600 விமானநிலையங்களை கட்ட முடியுமா?: திருநாவுக்கரசர் கேள்வி

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்துள்ள பட்ஜெட் ஓராண்டுக்கானதா? இல்லை ஐந்தாண்டுக்கான பட்ஜெட்டா என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.

2018-19ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்,  “பட்ஜெட் என்பது ஓராண்டுக்கான வரவு செலவு திட்டம்தான். பாஜக வெளியிட்டுள்ள பட்ஜெட் ஐந்தாண்டு, பத்தாண்டுக்கான பட்ஜெட்டாக வெளியிடப்பட்டுள்ளது.இது நாட்டு மக்களை ஏமாற்றும் தந்திரம். ஒரே ஆண்டில் 36ஆயிரம் கி.மீ ரயில் பாதையை எப்படி இணைக்க முடியும்?. நாடு முழுவதும் சுமார் 126 விமான நிலையங்களை 5 மடங்கு உயர்த்தி சுமார் 600 விமானநிலையங்களை ஒரே ஆண்டில் ஏற்படுத்திவிட முடியுமா?.இது கார்ப்பரேட் அரசாங்கம், பெரும் தொழிலதிபர்களுக்கு உதவிடும் அரசாங்கம். ஆரம்ப கல்வி வளர்ச்சி, வேலை வாய்ப்பு, விவசாயிகளின் கடன் ரத்து போன்றவற்றிற்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை.மக்களுக்கு இந்த பட்ஜெட் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் வரவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான தேர்தல் முன்னோட்ட அறிக்கை” என தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com