டிரெண்டிங்
திரைத்துறைக்கு மத்திய அரசு மூலம் உதவ முயற்சிக்கிறேன்: தமிழிசை பேட்டி
திரைத்துறைக்கு மத்திய அரசு மூலம் உதவ முயற்சிக்கிறேன்: தமிழிசை பேட்டி
திரைப்படத்துறைக்கு உதவி செய்யுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை வரவேற்க சென்றபோது, செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, அசோக்குமாரின் உயிரிழப்புக்கு பிறகே திரையுலகிலுள்ள கந்துவட்டி உள்ளிட்ட பிரச்னைகள் தெரியவருவதாக ஆதங்கப்பட்டார். மேலும், திரைத்துறையினருக்கு நிதி உதவி குழுவையோ, வங்கியில் தனிப்பிரிவை ஏற்படுத்தவோ முடியுமா என்பதை அலசி ஆராய்ந்து மத்திய அரசிடம் எடுத்துச் செல்ல இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். திரைப்படத்துறைக்கு உதவ முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

