“ அதிமுக முடிவுகள் குறித்து தொண்டர்கள் வெளியே பேச வேண்டாம்”- அதிமுக அறிவுறுத்தல்

“ அதிமுக முடிவுகள் குறித்து தொண்டர்கள் வெளியே பேச வேண்டாம்”- அதிமுக அறிவுறுத்தல்

“ அதிமுக முடிவுகள் குறித்து தொண்டர்கள் வெளியே பேச வேண்டாம்”- அதிமுக அறிவுறுத்தல்
Published on

அதிமுகவின் முடிவுகள் பற்றி பொதுவெளியில் தொண்டர்கள் பேச வேண்டாம் என தலைமை அறிவுறுத்தியுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளராக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் உள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேசமயம் 22 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது.

இதனிடையே அதிமுகவிற்குள் மீண்டும் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது அதிமுகவிற்கு ஒரே தலைமைத் தேவை என மதுரை தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேசியதுதான் இந்தச் சர்ச்சைக்கு காரணம். இரட்டை தலைமையால் அதிமுகவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும் ஜெயலலிதாவால் அதிகம் அடையாளம் காணப்பட்டவர் தலைமை ஏற்க வேண்டும் எனவும் ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.  எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவின் கருத்தை வரவேற்பதாக அதிமுக பெரம்பலூர் மாவட்டச் செயலாளரும் குன்னம் எம்.எல்.ஏவுமான, ஆர்.டி. ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அதிமுகவின் முடிவுகள் பற்றி பொதுவெளியில் தொண்டர்கள் பேச வேண்டாம் என தலைமை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஓபிஎஸ்- ஈபிஎஸ் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நாம் ஒரு தாய் மக்கள் என்பதை மறந்துவிட வேண்டாம் என குறிப்பிட்டுள்ளனர். அதிமுகவின் நலன் கருதி கருத்துக்களை யார் கூற விரும்பினாலும் அதற்கென பொதுக்குழு, செயற்குழு ஆலோசனைக் கூட்டம் உள்பட பல்வேறு வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

எனவே அதிமுகவின் நிர்வாக முறைகளை பற்றியோ, தேர்தல் முடிவுகளை பற்றிய தங்கள் பார்வைகள் குறித்தோ, அதிமுகவின் முடிவுகள் குறித்தோ பொதுவெளியில் கருத்துக்களை கூற வேண்டாம் என தொண்டர்களை கேட்டுக்கொள்வதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com