மத்திய அமைச்சரவையில் மாற்றம் - அருண் ஜெட்லி துறை பியூஷ் கோயலிடம் ஒப்படைப்பு
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அருண் ஜெட்லிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், நிதித்துறை பியூஷ் கோயல் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அருண் ஜெட்லி உடல் நலம் தேறிவரும் வரை இந்தத் துறை அவர் வசம் இருக்கும். பியூஷ் கோயல் ஏற்கனவே ரயில்வே துறையை கவனித்து வந்த நிலையில், கூடுதலாக நிதித்துறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை இணை அமைச்சரான ராஜ்வர்தன் ரத்தோர் வசம் கூடுதலாக ஸ்மிரிதி ரானி இடம் இருந்த தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது. வெங்கையா நாயுடு துணை குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பின் அவர் வசம் இருந்த தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை ஸ்மிரிதி ரானிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டது.
முன்னதாக, அருண் ஜெட்லிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீர் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.