அதிமுக அழிய வேண்டுமென தினகரன் நினைக்கிறார்: சி.வி.சண்முகம்
அதிமுக அழிய வேண்டும் என்ற நோக்கில் டிடிவி தினகரன் செயல்படுவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.
இரட்டை இலைச்சின்னம் தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் அணி சார்பிலும், டிடிவி தினகரன் அணி சார்பிலும் ஏராளமான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த விசாரணையை தினகரன் அணியினர் தாமதப்படுத்துவதாகவும், அத்துடன் தினகரன் தரப்பு தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை என்றும் ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் அணியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், தாங்களே உண்மையான அதிமுக என்பதால், இரட்டை இலைச் சின்னம் தங்களுக்கே கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அத்துடன் அதிமுக அழிய வேண்டும் என்ற நோக்கத்துடன் டிடிவி தினகரன் செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.