சசிகலாவின் முகத்தை டிவியில் பார்த்தவர்களுக்கு... சி.ஆர்.சரஸ்வதி உருக்கம்!

சசிகலாவின் முகத்தை டிவியில் பார்த்தவர்களுக்கு... சி.ஆர்.சரஸ்வதி உருக்கம்!

சசிகலாவின் முகத்தை டிவியில் பார்த்தவர்களுக்கு... சி.ஆர்.சரஸ்வதி உருக்கம்!
Published on

அமைச்சர் செல்லூர் ராஜுவின் பேச்சு ஸ்லீப்பர் செல்ஸ் வெளிவருவதை காட்டுகிறது எனவும், சசிகலா முகத்தை டிவியில் பார்த்தவர்களுக்கு மனசாட்சி உருத்தும் என்றும் டி.டி.வி.தினகரன் அணியை சேர்ந்த சி.ஆர்.சரஸ்வதி கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சி.ஆர்.சரஸ்வதி, “செல்லூர் ராஜூ தனக்கும் ஒரு மனசாட்சி உண்டு என்பதை தெளிவாக கூறியிருக்கிறார். ஆனால் மனதில் உள்ளதை பேச முடியாத சூழலில் இருக்கிறேன், இந்த அரசு அமைய சசிகலாதான் காரணம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை எனவும் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். இதைத்தான் நாங்கள் ஸ்லீப்பர் செல்ஸ் வெளிவருகிறார்கள் என்று கூறினோம். சசிகலாவின் முகத்தை டிவியில் பார்த்தவர்களுக்கு, அரசை உருவாக்கியது சசிகலாதான் என்ற எண்ணம் வருகிறது. அதன் வெளிப்பாடுதான் தற்போது வெளிவரத்தொடங்கியுள்ளது” என்று கூறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com