”வெறும் 999 பவுண்ட்டில் உலக நாடுகளுக்கு உலா வரலாம்” - பிரிட்டிஷ் டிராவல்ஸின் அதிரடி ஆஃபர்!

”வெறும் 999 பவுண்ட்டில் உலக நாடுகளுக்கு உலா வரலாம்” - பிரிட்டிஷ் டிராவல்ஸின் அதிரடி ஆஃபர்!

”வெறும் 999 பவுண்ட்டில் உலக நாடுகளுக்கு உலா வரலாம்” - பிரிட்டிஷ் டிராவல்ஸின் அதிரடி ஆஃபர்!
Published on

ஊர் சுற்றிப்பார்க்க யாருக்குதான் பிடிக்காமல் போகும்? அதுவும் உலகில் உள்ள நாடுகளை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எல்லார் மனதிலும் நீக்கமற நிறைந்திருக்கும்.

ஆனால் உலக நாடுகளுக்கு சென்று சுற்றிப் பார்க்க வேண்டுமானால் லட்சக் கணக்கில் செலவிட வேண்டும் என்ற எண்ணமே அடுத்த கணம் தோன்றும். அப்படியான எண்ணங்களை போக்கும் ஒரு அற்புதமான ஆஃபரைதான் பிரிட்டனைச் சேர்ந்த டிராவல்ஸ் கம்பெனி ஒன்று அறிவித்துள்ளது.

அதன்படி வெறும் 999 பவுண்ட் செலவில் அதாவது இந்திய மதிப்பில் 94 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சென்று சுற்றிப்பார்க்கும் வகையிலான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சுற்றுலா நவம்பர் 15ம் தேதி முதல் தொடங்கும் என்றும், புக்கிங் செய்ய செப்டம்பர் 5ம் தேதிதான் கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவில் தொடங்கும் இந்த பயணம், லாஸ் ஏஞ்சலஸ், கலிஃபோர்னியா போன்ற மாகாணங்களை சுற்றிப்பார்க்க வைக்கிறது டிராவல்ஸ் கம்பெனி.

அதன்பிறகு ஆஸ்திரேலியாவுக்கு பறந்து அங்கும் சைட் சீயிங் பார்க்கச் செய்கிறது. மேலும் விமிட் டிராவல் பாஸ் எடுத்தால் எந்த தொந்தரவும் இல்லாமல் மெல்பெர்ன் முதல் கெய்ர்ன்ஸ் வரை உலா வரலாம். இதுபோக ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் இருந்து ரெட் சென்டர் வழியாக டார்வின் வரை சென்று மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள புரூம் வரையும் இந்த பாஸை வைத்து செல்லலாமாம்.

இதனையடுத்து ஆசியா பக்கம் திரும்பும் வண்டி முதலில் கோலாலம்பூரில் வந்தடையும், அதன் பின்னர் சிங்கப்பூர் மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகளில் உலவலாம் என Trailfinders டிராவல்ஸ் கம்பெனி தெரிவித்திருக்கிறது.

இது பம்பர் ஆப்ஃராக இருந்தாலும் புக்கிங் செய்யும் அனைவரும் சுற்றுலா செல்வதற்கான அனைத்து அடிப்படை ஆவணங்களை மறக்காமல் கொண்டு வர வேண்டும் எனவும், குறிப்பாக சன் ஸ்க்ரீன் லோஷன்களை வைத்திருப்பது நல்லது என்றும் அந்த டிராவல்ஸ் கம்பெனி தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com