ஜி.எஸ்.டி-யின் கீழ் பெட்ரோல், டீசல் விலை: ராகுல்காந்தி கோரிக்கை

ஜி.எஸ்.டி-யின் கீழ் பெட்ரோல், டீசல் விலை: ராகுல்காந்தி கோரிக்கை

ஜி.எஸ்.டி-யின் கீழ் பெட்ரோல், டீசல் விலை: ராகுல்காந்தி கோரிக்கை
Published on

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜி.எஸ்.டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரி நாடு முழுவதும் கடந்த ஜூலை ஒன்றாம் தேதி அமலுக்கு வந்தது. ஜி.எஸ்.டி-யில் 5, 12, 18, 28 என மொத்தம் நான்கு வகையான வரி விதிப்புகள் உள்ளது. அதற்கு மேல் செஸ் வரி உள்ளது. சில பொருட்களுக்கு ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் பல்வேறு கட்டங்களாக கூடி பொருட்களின் விலைகளை நிர்ணயம் செய்து வருகிறது. இருப்பினும், ஜிஎஸ்டிக்கு பின் வரி விதிப்பு சிக்கலாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தது. அதேபோல், விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள்கள் குறித்தும் கேள்விகள் எழுந்தது. இந்த நிலையில், ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டம் மீண்டும் நேற்று நடந்தது. இதில் சிறு, நடுத்தர வியாபாரிகள் ஏற்றுமதியாளர்களுக்கு ஜி.எஸ்.டியில் சலுகைகள் அளிக்கப்பட்டன. 

இதனையடுத்து, ஜி.எஸ்.டி குறித்து ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார். அதில், “ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் கொண்டு வந்தது பிரதமர் மோடியின் தேர்தல் ஆதாயத்திற்காகத்தான். ஏழைகளை பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலையையும் ஜி.எஸ்.டி.க்குள் ஏன் கொண்டு வரவில்லை? ஜிஎஸ்டியால் வியாபாரிகள், சிறு மற்றும் குறு தொழில் முனைவோர் பாதிக்கப்படுகிறார்கள். கோடிஸ்வரர்கள் லாபம் அடைகிறார்கள்.

ஒரே தேசம், ஏழு வரி என்பதை சரி செய்யும் தருணம் இது. வரி விதிப்பை நல்லதாகவும், எளிமையாகவும் மாற்றுங்கள். மக்களிடம் இருந்து அதிக லாபம் சம்பாதிப்பதை தடுத்து நிறுத்தும் பொருட்டு முதலில் பெட்ரோல் மற்றும் டீசலை ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வாருங்கள். மத்திய அரசு மட்டும் ரூ.2,73,000 கோடி லாபம் சம்பாதிக்கிறது” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com