யாரை முதலில் கருத்தரிக்க வைப்பது? ஆறு மனைவியை மணந்த பிரேசில் மாடலின் நூதன முடிவு!

பிரேசில் மாடலான ஆர்தர் தனது 6 மனைவிகளில் யாரை முதலில் கருத்தரிக்க வைப்பது என்பதை முடிவெடுக்க முடியாமல் இருப்பதாக ஆர்தர் கூறியிருக்கிறாராம்.
Arthur O Urso
Arthur O UrsoTwitter

பிரேசில் மாடலும், இன்ஃப்ளூயன்சருமான ஆர்தர், பலதார மணம் புரிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். தற்போது தனது 6 மனைவிகளில் யாரை முதலில் கருத்தரிக்க வைப்பது என்பதை முடிவெடுக்க முடியாமல் இருப்பதாக ஆர்தர் கூறியிருக்கிறாராம்.

ஏற்கெனவே 9 பெண்களை திருமணம் செய்ததில் அதில் மூவரை விவாகரத்து செய்திருந்த ஆர்தர் தற்போது 6 மனைவிகளுடன் ஒன்றாக வாழ்ந்து வருகிறார். தற்போது தனது ஒவ்வொரு மனைவியிடத்திலிருந்தும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கும் ஆர்தர் அதனை எப்படி செயல்படுத்துவது என தெரியாமல் விழிப்பிதுங்கி போயிருக்கிறார் என டெய்லி மெயில் தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

Arthur 'O' Urso
Arthur 'O' UrsoTwitter

ஏனெனில் ஆறு பேரில் ஒருவர் மட்டும் கருத்தரித்து மற்றவர்களை அதிருப்தியில் ஆழ்த்த தனக்கு மனமில்லை என்பதால் இந்த குழப்பம் நீடிப்பதாக ஆர்தர் கூறியிருக்கிறார். ஆகையால் இந்த நிலையை ஏற்படுத்தாமல் இருக்க ஆறில் முதல் மனைவியான லூவானாவின் கரு முட்டையை வைத்து வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றெடுக்கும் முயற்சியில் இறங்கப் போவதாக தெரிவித்திருக்கிறார் ஆர்தர்.

இப்படி செய்வதால் ஆறு பேரில் எவருக்கும் எந்த மனக்கசப்பும் ஏற்பட்டுவிடாது என்பதால் இந்த முடிவை ஆர்தர் கையில் எடுத்திருக்கிறார். இதுபோக, முன்னாள் மனைவியுடனான பந்தத்தில் ஆர்தருக்கு ஏற்கெனவே மகள் இருப்பதால் அடுத்ததாக பிறக்கப்போகும் குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் வெளிப்படுத்திருக்கிறார்.

Arthur 'O' Urso
Arthur 'O' UrsoTwitter

இந்த வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்கும் முறைக்காக 40,798 அமெரிக்க டாலர் அதாவது 33 லட்சம் வரை செலவிட ஆர்தர் தயாராக இருப்பதாகவும், எதிர்காலத்தில் குழந்தையை தத்தெடுப்பதற்கான யோசனைக்கு திறந்த மனதாக இருப்பதாகவும் ஆர்தர் கூறியதாக செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com