கடைசி ஓவரை பிராவோவுக்கு வழங்காதது ஏன்? - தோனி விளக்கம்.!

கடைசி ஓவரை பிராவோவுக்கு வழங்காதது ஏன்? - தோனி விளக்கம்.!

கடைசி ஓவரை பிராவோவுக்கு வழங்காதது ஏன்? - தோனி விளக்கம்.!
Published on
கடைசி ஓவரை பிராவோவுக்கு பதிலாக ஜடேஜாவுக்கு வழங்கியது குறித்து தோனி விளக்கமளித்துள்ளார்.
 
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ஷிகர் தவான் அபார சதத்தால் டெல்லி கேபிடல்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த டெல்லி அணி 19.5 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.
 
குறிப்பாக கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிஎஸ்கே அணியில் ஜடேஜா பந்தை வீசினார். இது போட்டியை தலைகீழாக மாற்றியது. இந்த ஓவரில் டெல்லி அணியின் அக்ஸர் படேல் 3 சிக்சர்களை பறக்க விட்டு அசத்தினார். இதனால், சென்னை அணி தோல்வியை சந்தித்தது.
 
 
போட்டிக்குப் பிறகு சென்னை கேப்டன் டோனி கூறுகையில், “பிராவோ உடல் தகுதியுடன் இல்லை. இதனால், களத்தில் இருந்து வெளியேறிய பிராவோ மீண்டும் களத்திற்கு வரவில்லை. அதனால் எங்களுக்கு இரண்டு ஆப்ஷன் இருந்தது. ஒன்று கரண் ஷர்மா அல்லது ஜடேஜா. இதில் ஜடேஜாவை தேர்வு செய்தேன். அது போதுமானதாக இல்லை.
 
ஷிகர் தவானின் விக்கெட் மிகவும் முக்கியமானது. அவருக்கு சில கேட்ச்களை நாங்கள் தவறவிட்டோம். தவான் எப்போதுமே நல்ல ஸ்டிரைக் ரேட்டை கொண்டு செல்வார். எனவே, அவரது விக்கெட் மிகவும் முக்கியமானது. அதேபோல், முதல் இன்னிங்சுக்கும் இரண்டாவது இன்னிங்சுக்கும் பல்வேறு வேறுபாடு இருந்தது. இரண்டாவது இன்னிங்சில் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சிறிது ஏதுவாக இருந்தது. எப்படி இருந்தாலும் ஷிகர் தவான் சிறப்பாக பேட்டிங் செய்தார்” என்றார்.
 
டெல்லி அணிக்கு போட்டியில் அடைந்த எதிரான தோல்வியின் மூலம் சென்னை அணி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பு குறைந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com