மெட்ரோ ரயிலில் கொட்டிய உணவை கைக்குட்டையால் சுத்தம் செய்த சிறுவன்! வைரலாகும் பதிவு
டெல்லி மெட்ரோ ரயிலில் உணவு கொட்டியவுடன் அவற்றை தனது கைக்குட்டையால் சுத்தம் செய்த சிறுவனின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
டெல்லி மெட்ரோ ரயிலில் சில தினங்களுக்கு முன்பு பள்ளி மாணவர் ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது தனது பையில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்த போது அவனது டிபன் பாக்ஸ் கீழே விழுந்து உணவு மொத்தமும் தரையில் கொட்டியது. உடனடியாக அந்த சிறுவன் தனது ஒரு நோட்டுப் புத்தகத்தில் இருந்து சில தாள்களை கிழித்து, கொட்டிய உணவை ஒரு பருக்கை விடாமல் கையில் எடுத்து அகற்றினார். அத்துடன் விடாமல், தண்ணீரை ஊற்றி தனது கைக்குட்டை மூலம் தரையில் உள்ள உணவுக் கறையையும் அச்சிறுவன் சுத்தம் செய்துள்ளார். சிறுவனின் இந்த செயலால் அங்கிருந்தவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
சிறுவனின் இந்த செயலை அங்கிருந்த சக பயணி ஒருவர், தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து ட்விட்டரில் வெளியிட, தற்போது அந்த சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.