\
இரு அணிகளும் விரைவில் இணையும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இரு அணிகளும் விரைவில் இணையும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இரு அணிகளும் விரைவில் இணையும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி
Published on

விரைவில் இரு அணிகளும் இணையும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு தின விழாவில் பங்கேற்க சென்ற அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை ஜெயலலிதா கண்ணை இமை காப்பதைப்போல காத்து வந்தார். தொடர்ந்து தமிழக மக்களுக்கு தனது ஆட்சியில் ஏராளமான திட்டங்களையும், நலன்களையும் அளித்து வந்தார். அவர் விட்டுச் சென்ற ஆட்சி சிறப்பாக வழி நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது.

இடையிலே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இப்போது பேச்சுவார்த்தைகள் மூலமாக சரி செய்யப்பட்டு விரைவில் இரு அணிகளும் இணையும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்’எனத் தெரிவித்தார். இரு அணிகள் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருவதாகவும் ஓரிரு நாட்களில் முடிவு எட்டப்படும் என ஓ.பன்னீர்செல்வமும் தெரிவித்து இருக்கிறார்.   

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com