”தேர்தலில் வாக்களிக்க பூத் சிலிப் கட்டாயமில்லை” - தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி

”தேர்தலில் வாக்களிக்க பூத் சிலிப் கட்டாயமில்லை” - தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
”தேர்தலில் வாக்களிக்க பூத் சிலிப் கட்டாயமில்லை” - தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி

தேர்தலில் வாக்களிக்கும் போது வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் குறித்த கேள்விகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கமாக பதிலளித்தார்.

கேள்வி: வாக்குப்பதிவிற்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே ஒருமாதகால அவகாசம் எதற்கு அதற்கான காரணம் என்ன?

பதில்: ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. ஒரு மாநிலத்துடைய ரிசல்ட் இன்னொரு மாநிலத்தை பாதிக்கக் கூடாது. அதனால் தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்கள் ஓட்டுப்பதிவு முடியும் வரையிலும் காத்திருந்து ஒரே வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என்பது தேர்தல் ஆணையத்தில் உத்தரவு.

கேள்வி: அப்படி முன்கூட்டியே முடிவை அறிவித்தால் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?

பதில்: இப்போது இல்லை இதற்கு முன்புகூட ஒரே நாளில்தான் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுள்ளது. ஒரு மாநிலத்தில் வரும் தேர்தல் முடிவுகள் அடுத்த மாநிலத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த முடிவை தேர்தல் ஆணையம் எடுத்திருக்கிறது.

கேள்வி: நான் ஒரு சின்னத்திற்கு வாக்களிக்கும் போது விவி. பேட்டில் அந்த சின்னத்தில் லைட் எரியவில்லை என்றால் நான் என்ன செய்ய வேண்டும்?

பதில்: நாம் எந்த சின்னத்திற்கு வாக்களிக்கிறோமோ அதுதான் விவி. பேட்டில் வரும். அது 100 சதவீதம் உறுதிபடுத்தப்பட்டது. இதில் எந்த தவறும் நடக்க முடியாதபடி பலமுறை சோதனை செய்யப்பட்ட பின்பே விவி. பேட் அங்கு வைக்கப்படும். இதையும் மீறி ஏதாவது தவறு நடந்தால் அங்கு இருக்கும் தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுக்கலாம். அப்படி புகார் கொடுக்கும் போது அது உண்மையானதாக இருக்க வேண்டும். பொய் சொன்னால் அதற்கு அபராதத்துடன் கூடிய தண்டனை உண்டு.

கேள்வி: பூத் சிலிப் இல்லாமல் வாக்களிக்க முடியுமா?

பதில்: பூத் சிலிப் கொடுப்பது, நமக்கு எந்த வாக்குச் சாவடியில் வாக்கிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள தான். பூத் சிலிப் இல்லாவிட்டாலும் வாக்குச்சாவடி இதுதான் என் தெரிந்தால் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை கொடுத்து வாக்களிக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com