\
பிரபாஸூக்கு ஜோடியாகும் பாலிவுட் ஹீரோயின்!

பிரபாஸூக்கு ஜோடியாகும் பாலிவுட் ஹீரோயின்!

பிரபாஸூக்கு ஜோடியாகும் பாலிவுட் ஹீரோயின்!
Published on

பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்தில் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் ஜோடியாக நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஹிந்தி, தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் படம் சாஹோ. பாகுபலி வெற்றிக்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளிவரும் முதல் திரைப்படம் இது. சுஜீத் இயக்கும் இந்தப்படத்திற்கு ஷங்கர் எஷந்லாய் இசையத்து வருகிறார். இந்த படத்தில் பிரபாஸுடன் அனுஷ்கா நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது. மேலும் சில பாலிவுட் நடிகைகளின் பெயர்களும் அடிபட்டது. இந்நிலையில் ஷ்ரத்தா கபூர் நாயகியாக நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். பல படங்களில் நடித்துள்ள ஷ்ரத்தா கபூர் பாலிவுட்டின் முன்னணி நாயகியாக வலம் வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com