நடிகை ஹனி ரோஸ் கொடுத்த பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட பாபி செம்மனூர் யார்? இவரின் பின்னணி என்ன?
நடிகை ஹனி ரோஸ் கொடுத்த பாலியல் தொல்லை புகாரின் அடிப்படையில், சிறப்பு விசாரணை குழுவினர் பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூரை நேற்று முன் தினம் கொச்சியில் கைது செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாபி செம்மனூரை 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாபி செம்மனூர் தன் மீது பதியப்பட்ட வழக்கு குறித்து பத்திரிக்கையாளரிடம் பேசுகையில், மன்னிப்பு கேட்கும் அளவுக்கு தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் இரட்டை அர்த்தத்தை பயன்படுத்தியது தான் தன் மீதான ஒரே வழக்கு என்றும் பதிலளித்தார்.
யார் இந்த பாபி செம்மனூர்?
கேரளாவில் உள்ள திருச்சூரில் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தவர் தான் இந்த பாபி சின்னமனூர். "பாபி செம்மனூர் இன்டர்நேஷனல் குழுமத்தின்" உரிமையாளர். நகைக்கடையின் உரிமையாளர். லைஃப் விஷன் என்ற அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம் ஒரு சிறந்த சமூக சேவகராகவும் அறியப்படுகிறார். பிரபலமான ஹோட்டல்களையும், தீம் பார்க் ஒன்றையும் இவர் நடித்தி வருவதாக கூறப்படுகிறது.
இவருக்கு வயநாட்டில் 1000 ஏக்கர் அளவில் தேயிலை தோட்டம் உள்ளது. இந்த 1000 ஏக்கர் இடத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு வீடு கட்ட 12 முதல் 15 ஏக்கர் நிலத்தை அவர் இலவசமாக வழங்க உள்ளதாக கூறியுள்ளார். பாபி செம்மனூரின் சொத்து மதிப்பு ரூ.600 கோடி முதல் ரூ.700 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
இரத்த வங்கி விழிப்புணர்வுக்காக ஏப்ரல் 2014 இல், அவர் காசர்கோடில் இருந்து திருவனந்தபுரம் வரை ஓடி 812 கிலோமீட்டர் தூரத்தை ஈர்க்கும் மாரத்தான் ஓட்டத்தை முடித்து சாதனைப்படைத்தார்.
கேரள மாநில பொருளாதாரத்திற்கு அவர் செய்த சேவைகளைப் பாராட்டி கடந்த 2021-ம் ஆண்டு கேரள மாநில தொழில்முனைவோர் விருதைப் பெற்றவர்.