\
தண்ணீரே இல்லாத தமிழ்நாட்டில் தாமரை எப்படி மலரும்?: நாஞ்சில் சம்பத்

தண்ணீரே இல்லாத தமிழ்நாட்டில் தாமரை எப்படி மலரும்?: நாஞ்சில் சம்பத்

தண்ணீரே இல்லாத தமிழ்நாட்டில் தாமரை எப்படி மலரும்?: நாஞ்சில் சம்பத்
Published on: 

தமிழ்நாட்டில் தண்ணீரே இல்லை.. தாமரை எப்படி மலரும் என டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " அதிமுக-வின் ஆட்சி தொடர்ந்து நீடிக்க வேண்டும். அதிமுக கட்சியும், ஆட்சியும் நூறாண்டு நிலைத்திருக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கனவை பூர்த்தி செய்ய வேண்டிய கடமை உள்ளது.  தமிழகத்தில் முதலமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. டிடிவி தினகரனை தமிழக முதலமைச்சராக்க வேண்டும் என்கிற கனவு எங்களுக்கு இருக்கிறது" என்றார்.

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என பாஜக தலைவர்கள் கூறியது பற்றிய கேள்விக்கு பதிலளித்த நாஞ்சில் சம்பத், தமிழ்நாட்டில் தண்ணீரே இல்லை.. தாமரை எப்படி மலரும்? என கேள்வி எழுப்பினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com