''கர்நாடகாவில் ஆட்சி அமைப்போம்'' : பிரகாஷ் ஜவடேகர்
கர்நாடகாவில் பாரதிய ஜனதா ஆட்சியமைக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிப் பெற்ற பாரதிய ஜனதா ஆட்சியமைப்பதை தடுக்க மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கைகோர்த்துள்ளது காங்கிரஸ். காங்கிரஸ் 78 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் 37 இடங்களை கைப்பற்றியுள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குமாரசாமி மற்றும் எடியூரப்பா ஆகிய இருவரும் ஆளுநரிடம் ஆட்சியமைக்க அழைப்புவிடுக்க நேரில் சந்தித்துள்ளனர்.
இந்நிலையில் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைப்பதை மதச் சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களில் பலர் விரும்பவில்லை. இது இயற்கைக்கு மாறானது எனக் கருதுகிறார்கள். இந்நிலையில் ஆட்சியமைக்க ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றி நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இதன்படி நாங்கள் நிச்சயம் ஆட்சி அமைப்போம் என்று பாஜக மூத்த தலைவரும் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.