இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறை ! காங்கிரஸை விட அதிக இடங்களில் போட்டியிடும் பாஜக

இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறை ! காங்கிரஸை விட அதிக இடங்களில் போட்டியிடும் பாஜக
இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறை ! காங்கிரஸை விட அதிக இடங்களில் போட்டியிடும் பாஜக

இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக பாஜக காங்கிரஸ் கட்சியைவிட அதிக தொகுதிகளில் போட்டியிடுகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 3 கட்டத் தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. இந்தத் தேர்தல்களில் கனிசமான வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்தத் தேர்தல்களில் பாஜக வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கவேண்டும் என்ற தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதேபோல பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் செயல்பட்டுவருகிறது. 

இந்நிலையில் இம்முறை தேர்தல் களத்தில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சியைவிட அதிக வேட்பாளர்களை பாஜக நிறுத்தியுள்ளது. இந்த வருடம் பாஜக இதுவரை 437 வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி 423 வேட்பாளர்களை மட்டுமே தேர்தல் நிறுத்தியுள்ளது. அத்துடன் காங்கிரஸ் கட்சி இன்னும் உத்தரபிரதேசத்தின் இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தான் வேட்பாளர் அறிவிக்கவேண்டும். இதனால் காங்கிரஸ் கட்சி இம்முறை பாஜகவின் வேட்பாளர்கள் எண்ணிக்கையை தாண்ட முடியாது. 

இது அரசியல் வரலாற்றில் ஒரு புதிய மைல்கள்ளாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்திய நாடு சுதந்திரம் பெற்ற பின்பு காங்கிரஸ் கட்சி தனிபெரும் கட்சியாக உருவேடுத்தது. நாட்டிலேயே பெரும்பாண்மையான இடங்களை தன்வசம் வைத்திருந்தது. அத்துடன் பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. இதற்கு மாறாக பாரதிய ஜனதா கட்சி தொடக்கத்தில் மிகவும் குறைவான எம்பிக்களையே கொண்டு இருந்தது. 

ஏற்கெனவே பாஜக மத்தியில் 1998-1999ஆம் ஆண்டுகளில் வாஜ்பாய் தலைமையில் ஆட்சியமைத்திருந்தாலும் அக்கட்சி 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பெற்ற வெற்றிதான் மிகவும் பலம்வாய்ந்தது. ஏனென்றால் 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக 282 இடங்களில் வெற்றிப்பெற்று தனிபெரும் கட்சியாக நின்றது. அத்துடன் தனியாக ஆட்சியமைக்கும் தகுதியை பெற்றிருந்தது. அத்துடன் இந்தத் 2014 தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகவும் மோசமான தோல்வியை தழுவியது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றிப் பெற்றது.

கடந்த 2014 தேர்தலில் காங்கிரஸ் கட்சி 464 தொகுதிகளிலும், பாஜக 428 தொகுதிகளிலும் போட்டியிட்டது. அதேபோல 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 433 தொகுதியிலும், காங்கிரஸ் 440 தொகுதியிலும் களமிறங்கியது. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 364 தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி 414 தொகுதியிலும் நின்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com