டிரெண்டிங்
போராட்டம் நடத்தாமல் பயிற்சி வகுப்பு தொடங்கலாம் - எதிர்க்கட்சிகளுக்கு தமிழிசை கோரிக்கை
போராட்டம் நடத்தாமல் பயிற்சி வகுப்பு தொடங்கலாம் - எதிர்க்கட்சிகளுக்கு தமிழிசை கோரிக்கை
மருத்துவம் குறித்த தெரியாத நடிகர்களும், அரசியல்வாதிகளும் நீட் குறித்து பேசுவது வேதனையளிப்பதாக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "நடிகராக உள்ள சூர்யாவுக்கு, மருத்துவர்களின் நீட் தேர்வு பற்றி முழுமையாக எப்படி தெரியும்" என அவர் கேள்வி எழுப்பினார். மேலும் பேசிய அவர், "நடிகர் சூர்யா போன்றோர் கோடிகளுக்காக பணியாற்றும் போது நாங்கள் தெருக்கோடியில் பணியாற்றினோம். ‛நீட்' என்றால் என்னவென்றெ தெரியாத 6ம் வகுப்பு மாணவர்களை கம்யூனிஸ்ட் கட்சிகள் தூண்டிவிடுகின்றன. ‛நீட்' மூலம் கிராமப்புற மாணவர்கள் உட்பட அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கிறது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவதற்கு பதில் பயிற்சி வகுப்புகள் துவங்கலாம்." எனவும் கூறினார்.