“பாஜக வேட்பாளரை வெற்றிபெற வைத்தால் இன்னோவா கார்” -  எல்.முருகன்

“பாஜக வேட்பாளரை வெற்றிபெற வைத்தால் இன்னோவா கார்” - எல்.முருகன்

“பாஜக வேட்பாளரை வெற்றிபெற வைத்தால் இன்னோவா கார்” - எல்.முருகன்
Published on

2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளரை வெற்றி பெற வைக்கும் மாவட்ட தலைவருக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும் என மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

பாஜகவின் மாவட்ட மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், “இன்னும் ஆறு மாதத்தில் தமிழக அரசியலில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். நாம் கை காட்டுபவர்கள் தான் 2021ல் ஆட்சிக் கட்டிலில் அமரப் போகிறார்கள்.

நமது எண்ணம், செயல்பாடு, நோக்கம் அனைத்தும் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற செய்து சட்டமன்றத்துக்கு அனுப்பும் வகையில் இருக்க வேண்டும். மாவட்ட தலைவர்கள், சட்டசபைக்கு பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்து அனுப்புங்கள். வெற்றி பெற செய்யும் மாவட்ட தலைவருக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com