தினகரன் கட்சியினர் எங்களுக்கும் தூதுவிட்டார்கள் - தமிழிசை

தினகரன் கட்சியினர் எங்களுக்கும் தூதுவிட்டார்கள் - தமிழிசை

தினகரன் கட்சியினர் எங்களுக்கும் தூதுவிட்டார்கள் - தமிழிசை
Published on

பல நேரங்களில் தினகரன் கட்சியை சேர்ந்தவர்கள் பாஜகவினரை சந்திக்க வேண்டும் என தூது விட்டிருக்கிறார்கள் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.

ஓபிஎஸ் தினகரன் சந்திப்பு தொடர்பாக கேள்விக்கு பதிலளித்த தமிழிசை, “தினகரன் - ஓபிஎஸ் விவகாரம் அவர்களின் உட்கட்சி விஷயம். அதில் நான் தலையிட முடியாது. அதே நேரத்தில், பல நாட்களுக்கு முன்னாள், தினகரன் கட்சியை சேர்ந்தவர்கள், எங்கள் கட்சியை சார்ந்தவர்களை பார்க்க வேண்டும் என்று தூதுவிட்டிருக்கிறார்கள். 

தினகரன் ஒரு கருத்தினை கூறினார். அதற்கு எந்தச் சூழ்நிலையில் சந்தித்தோம் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துவிட்டார். தர்மயுத்தமா? தர்மசங்கடமான யுத்தமா? எனத் தெரியவில்லை; அது அவர்களுக்குள் நடக்கும் போர். இவர்களின் பரஸ்பர குற்றச்சாட்டு தமிழக அரசியலில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. தினகரன் கட்சியை சேர்ந்தவர்கள் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது” என்று கூறினார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com