சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார் உ.பி. பாஜக எம்.பி

சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார் உ.பி. பாஜக எம்.பி
சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார் உ.பி. பாஜக எம்.பி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக எம்.பி ஷியாமா ஷரன் குப்தா, சமாஜ்வாடி கட்சியில் இணைந்துள்ளார். 

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், நாடு முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது. கட்சிகள் தங்களது கூட்டணிகளை கிட்டதட்ட உறுதி செய்துவிட்டன. அவர்களுக்கான தொகுதிகளை பிரித்துக் கொடுக்கும் வேலைகளையும் தீவிரமாக செய்து வருகிறார்கள். மேலும், ஒவ்வொரு கட்டங்களாக வேட்பாளர்களையும் அறிவித்து வருகிறார்கள். 

இந்நிலையில் ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு தாவும் நடவடிக்கை நாடு முழுவதும் உள்ள பல்வேறு கட்சிகளிடையே நடைபெற்று வருகிறது. இதில், அதிகமான அளவில் பாஜகவை நோக்கிதான் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் எம்.எல்.ஏக்கள் எனப் பலரும் படையெடுத்து வருகிறார்கள். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 15 தலைவர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலர் பாஜகவில் இணைந்துள்ளனர்.

மேலும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரக்யராஜ் தொகுதி பாஜக எம்.பி ஷியாமா ஷரன் குப்தா அக்கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். அகிலேஷ் யாதவின், சமாஜ்வாடி கட்சியில் இணைந்துள்ள அவர், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பண்டா தொகுதியில் களமிறங்குகிறார்.

முன்னதாக, சமாஜ்வாடி கட்சி சார்பில் பண்டா தொகுதியில் 1999ம் ஆண்டு போட்டியிட்டு பகுஜன் சமாஜ் கட்சியிடம் குப்தா தோல்வி அடைந்தார். பின்னர், 2004ம் ஆண்டு அதே தொகுதியில் போட்டியிட்டு எம்.பி ஆனார். பின்னர், 2014 மக்களவை தேர்தலில் பண்டா தொகுதியில் போட்டியிட்டு குப்தா வெற்றி பெற்றார். இந்நிலையில், சமாஜ்வாடி கட்சியில் மீண்டும் அவர் போட்டியிடுவது அக்கட்சிக்கு உற்சாகத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல், மதசர்பற்ற ஜனதா தளம் கட்சியின் பொதுச் செயலாளர் தனிஷ் அலி அக்கட்சியில் இருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்துள்ளார். இதனிடையே, ஒடிசாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com