டிரெண்டிங்
புதிதாக வைக்கப்பட்ட பாஜகவின் 70 அடி கொடிக்கம்பம் அகற்றம்
புதிதாக வைக்கப்பட்ட பாஜகவின் 70 அடி கொடிக்கம்பம் அகற்றம்
சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் பாஜக சார்பில் புதிதாக வைக்கப்பட்ட 70 அடி கொடிக்கம்பத்தை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அகற்றினர்.
பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று புதிதாக வைக்கப்பட்ட 70அடி உயர கொடிக்கம்பத்தில், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல்.முருகன் கட்சியின் கொடியை ஏற்றினார். இந்நிலையில், இந்தக் கொடிக் கம்பமானது விதிமுறைகளை மீறி சாலையோரத்தில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு இரவோடு இரவாக பாஜக கொடிக்கம்பம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றினர்.