நாட்டின் பணக்கார கட்சி பாஜக - ரூ1,034 கோடி சொத்து

நாட்டின் பணக்கார கட்சி பாஜக - ரூ1,034 கோடி சொத்து
நாட்டின் பணக்கார கட்சி பாஜக - ரூ1,034 கோடி சொத்து

இந்தியாவில் பணக்கார கட்சியாக மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா உள்ளது. அந்தக் கட்சிக்கு ரூ.1,034 கோடி சொத்து உள்ளது. ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளின் வருமானம், செலவு குறித்த விவரங்களை ஆய்வு செய்து அறிக்கையை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

2016-17 ஆம் ஆண்டில் 7 தேசிய கட்சிகளின் மொத்த வருமானம் ரூ.1,559.17 கோடி. அதில் பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டும் ரூ.1,034.27 கோடி வருமானம். அதாவது மொத்த வருமானத்தில் 66.34 சதவீதம். பாஜகவுக்கு அடுத்து காங்கிரஸ் கட்சிக்கு ரூ.225.36 கோடி வருமானம். மொத்த வருமானத்தில் இது 14.45 சதவீதம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மிகக்குறைவாக ரூ2.08 கோடி வருமானம். வெறும் 0.13 சதவீதம் தான். 7 தேசிய கட்சிகள் மொத்த செலவு ரூ.1,228.26 கோடி. நாடுமுழுவதும் உள்ள கட்சிகள் தாக்கல் செய்த வருமான வரி அறிக்கையின் மூலம் இந்த தகவல்கள் பெறப்பட்டுள்ளது. 

கட்சிகளின் வருமானம்:-

மொத்தம் - ரூ.1,559.17 கோடி

பாஜக         - ரூ.1,034.27 கோடி
காங்கிரஸ்     - ரூ.225.36 கோடி
பகுஜன் சமாஜ் - ரூ 173.58 கோடி

செலவு:- 

மொத்தம்  - ரூ1,228.26 கோடி

பாஜக         - ரூ 710.05  கோடி
காங்கிரஸ்     - ரூ 321.66 கோடி
பகுஜன் சமாஜ் - ரூ51.83 கோடி

2015-16 முதல் 2016-17 ஆண்டு வரை பாரதிய ஜனதா கட்சியின் வருமானம் 81.18 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, ரூ570.86 கோடி முதல் ரூ.1034.27 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் வருமானம் 14 சதவீதம் குறைந்துள்ளது. ரூ.261.56 கோடியில் இருந்து ரூ.225.36 கோடியாக சரிந்துள்ளது. இருப்பினும், காங்கிரஸ் கட்சி வருமானத்தை விட ரூ96.30 கோடி அதிகமாக காங்கிரஸ் செலவு செய்கிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com