\
தமிழகத்தில் ராகுல் பரப்புரைக்கு தடை கேட்கும் பாஜக

தமிழகத்தில் ராகுல் பரப்புரைக்கு தடை கேட்கும் பாஜக

தமிழகத்தில் ராகுல் பரப்புரைக்கு தடை கேட்கும் பாஜக
Published on: 

தமிழகத்தில் ராகுல் காந்தி பரப்புரை செய்ய தடை விதிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு மாநில பாஜக தலைவர் எல்.முருகன் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடப்பதாகக் கூறி தேர்தல் ஆணையத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் புகார் கடிதம் அளித்துள்ளார். தேர்தல் விதிகளை மீறியதற்காக ராகுல் மீது முதல் தகவல் அறிக்கை பதிய உத்தரவிடுமாறும் கடிதத்தில் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே, ராகுலின் வருகையின்போது தேர்தல் நடத்தை விதிகள் எதுவும் மீறப்படவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விளக்கமளித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com