நண்டு கொழுத்தால் வலையில் தங்காது: எஸ்.ஏ.சந்திரசேகர் மீது எச்.ராஜா தாக்கு

நண்டு கொழுத்தால் வலையில் தங்காது: எஸ்.ஏ.சந்திரசேகர் மீது எச்.ராஜா தாக்கு

நண்டு கொழுத்தால் வலையில் தங்காது: எஸ்.ஏ.சந்திரசேகர் மீது எச்.ராஜா தாக்கு
Published on

நண்டு கொழுத்தால் வலையில் தங்காது என்பது போல மதமாற்றும் சக்திகளின் கோர முகம் என எஸ்.ஏ.சந்திரசேகருக்கு எதிராக எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

மெர்சல் பட விவகாரத்தில் சர்ச்சை எழுந்த போது நடிகர் விஜயை, ஜோசப் விஜய் என குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார் ஹெச்.ராஜா. இந்நிலையில், விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரை கிறித்தவ மதமாற்றும் சக்திகள் என்று குறிப்பிட்டு ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.

ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பதிவில், “நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. இன்று தனக்கு ஜாதி இல்லை மதம் இல்லை நாங்கள் தமிழர்கள் மனிதர்கள் என்கிற கிறித்தவ மதமாற்றும் சக்திகளின் கோரமுகம் இதோ. நாம் ஏழுமலையானுக்கு செலுத்தும் காணிக்கை லஞ்சமாம். இந்துக்களே இனியும் நாம் ஏமாறப் போகிறோமா? ரசிகர் மன்றம் கலைப்போம் இந்துவாக இணைவோம்” என்று கூறியுள்ளார்.

விசிறி பட விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசிய வீடியோ பதிவினை இணைத்து அவர் இந்த விமர்சனத்தை செய்துள்ளார். எஸ்.ஏ.சந்திரசேகரின் அந்த வீடியோ பதிவில், “உண்டியலில் பணம் போட்டால் பாஸ் பண்ணிவிட முடியுமா? அப்படி என்றால் யாருமே பள்ளிக்கு போகதேவையில்லை. வீட்டிலே இருந்து கொள்ளலாம். படிக்கனும், உழைக்கனும், நல்லது செய்யனும், நல்லது நினைக்கனும், மனதார பேசனும்” என்று பேசியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com