கறுப்பு மங்களகரமானது - ஹெச்.ராஜா புது விளக்கம்!
பிரதமர் சென்னை வரும்போது திமுக கறுப்புக்கொடி காட்டுவதாகக் கூறியது ஆங்கிலேயரின் எண்ணத்தைக் காட்டுவதாக ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மீட்புப் பயணம் மேற்கொண்டுள்ள திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், பிரதமர் சென்னை வரும் தினத்தன்று அனைவரும் கறுப்புக்கொடி காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் அனைவரும் கறுப்பு உடை அணிந்து தங்கள் துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஹெச்.ராஜா, “பிரதமர் சென்னை வரும்போது திமுக கறுப்புக்கொடி காட்டும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார். அது, கருப்பு துக்ககரமானது என்கிற ஆங்கிலேயர்களின் எண்ணத்தையே காட்டுகிறது. நம் பண்பாட்டை பொருத்தவரை கறுப்பு மங்களகரமானது. சுமங்கலிப் பெண்கள் கருகமணி அணிவது நம் பண்பாட்டின் அம்சமாகும்.” என்று கூறியுள்ளார்.