\
அதிமுக கூட்டணி வேட்பாளரா ஈபிஎஸ்? -பதிலளிக்க முருகன் மறுப்பு

அதிமுக கூட்டணி வேட்பாளரா ஈபிஎஸ்? -பதிலளிக்க முருகன் மறுப்பு

அதிமுக கூட்டணி வேட்பாளரா ஈபிஎஸ்? -பதிலளிக்க முருகன் மறுப்பு
Published on

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரா என்ற கேள்விக்கு பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பதிலளிக்க மறுப்பு தெரிவித்து விட்டார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் நேரில் சந்தித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எல்.முருகன் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் முரண்பாடான கருத்துகளை கூறி வரும் நிலையில், அவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை முதலமைச்சர் ஆதரித்ததற்கு நன்றி தெரிவித்தாக கூறினார். தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரா என்ற கேள்விக்கு பதிலளிக்க அவர் மறுப்பு தெரிவித்து விட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com