கர்நாடக முதல்வராக நாளை எடியூரப்பா பதவியேற்கிறார் - பாஜக எம்எல்ஏ ட்விட்டரில் தகவல்

கர்நாடக முதல்வராக நாளை எடியூரப்பா பதவியேற்கிறார் - பாஜக எம்எல்ஏ ட்விட்டரில் தகவல்

கர்நாடக முதல்வராக நாளை எடியூரப்பா பதவியேற்கிறார் - பாஜக எம்எல்ஏ ட்விட்டரில் தகவல்
Published on

கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையில் நாளை பாஜக ஆட்சியமைக்கிறது என பாஜக எம்எல்ஏ ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பாஜக எம்.எல்.ஏ சுரேஷ்குமார் தனது ட்விட்டரில், “ராஜ்பவனில் நாளை காலை 9.30 மணியளவில் எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்கிறார். தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். மகிழ்ச்சியான விடுமுறை தினத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பெருவாரியான மக்கள் கலந்து கொள்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 11 நாள் அவகாசம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. காங்கிரஸ் மற்றும் பாஜக எம்.எல்.ஏக்கள் ஆளுநர் மாளிகையில் அணிவகுப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, பெங்களூருவில் காவலர்கள் யாரும் நாளை விடுப்பு எடுக்கக்கூடாது என மாநகர ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com