“மோடி கேமரா வைச்சிருக்கார், ஓட்டு போடவில்லைனா கண்டுபிடிச்சுருவாரு” பாஜக தலைவர் பேச்சு

“மோடி கேமரா வைச்சிருக்கார், ஓட்டு போடவில்லைனா கண்டுபிடிச்சுருவாரு” பாஜக தலைவர் பேச்சு

“மோடி கேமரா வைச்சிருக்கார், ஓட்டு போடவில்லைனா கண்டுபிடிச்சுருவாரு” பாஜக தலைவர் பேச்சு
Published on

பிரதமர் நரேந்திர மோடி வாக்குச் சாவடிகளில் கேமராக்கள் பொருத்தி இருக்கிறார், காங்கிரஸுக்கு வாக்களித்தால் தெரிந்துவிடும் என்று பாஜக தலைவர் ஒருவர் பேசியுள்ளார். 

நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள 6 கட்டங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக அரசியல் தலைவர்கள் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அப்படி தலைவர்கள் பேசுவது பல நேரங்களில் வைரல் ஆனது.

அந்தவகையில், குஜராத் மாநிலத்தில் பாஜக எம்.எல்.ஏ ரமேஷ் கட்டாரா, “பிரதமர் மோடி வாக்குச் சாவடிகளில் கேமிராக்கள் பொருத்தி இருக்கிறார். காங்கிரஸுக்கு வாக்களித்தால் தெரிந்துவிடும்” என்று பேசியுள்ளார். சிறிய மக்கள் கூட்டத்தின் நடுவே அவர் பேசுகையில், “பாஜக வேட்பாளர் ஜஷ்வந்த் சிங் பபோர் புகைப்படமும், அருகில் தாமரை சின்னமும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் இருக்கும். அதனை பார்த்து பட்டனை அழுத்த வேண்டும். அதில் தப்பு நடந்திடக் கூடாது. ஏனெனில் மோடி வாக்குச் சாவடிகளில் கேமராக்கள் பொருத்தி இருக்கிறார்.

அந்த கேமிரா மூலம் யார் பாஜகவுக்கு வாக்களிக்கிறார்கள், யார் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கிறார்கள் என்பது தெரியும். ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளில் உங்களுடைய புகைப்படம் உள்ளது. உங்கள் பூத்தில் இருந்து வாக்குகள் குறைவாக கிடைத்திருந்தால், யாரெல்லாம் வாக்களிக்கவில்லை என்பது அவருக்கு தெரிந்துவிடும். அதேபோல், உங்களுக்கு வேலையும் கிடைக்காது. அரசின் எந்த உதவி திட்டங்களும் கிடைக்காது” என்று கூறினார்.

பாஜக வேட்பாளர் ஜஷ்வந்த் தற்போது அந்த தொகுதி (தஹோத்) எம்.பி ஆக உள்ளார். பாஜக எம்.எல்.ஏவின் பேச்சுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com