'அமேதி தொகுதி மக்களை ராகுல் அவமதித்து விட்டார்' : ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு

'அமேதி தொகுதி மக்களை ராகுல் அவமதித்து விட்டார்' : ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு
'அமேதி தொகுதி மக்களை ராகுல் அவமதித்து விட்டார்' : ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு

வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அமேதி தொகுதி மக்களை அவமதித்து விட்டதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியுள்ளார்.‌ 

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து 3 முறை களமிறங்கி வெற்றி பெற்‌ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, 4-வது முறையாக அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த சூழலில் ராகுல் காந்தி வழக்கமாக போட்டியிடும் அமேதி தொகுதியைத் தவிர கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். அதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் தனது சகோதரி பிரியங்காவுடன் வந்து இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். கேரள மாநிலத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,அமேதி தொகுதியில் ராகுலுக்கு எதிராக போட்டியிடும் பாஜக வேட்பாளரும், மத்திய ஜவுளித் துறை அமைச்சருமான ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் தலைவர் ராகுல் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

கடந்த 15 வருடங்களாக அமேதி தொகுதியில் வெற்றி பெற்று அதிகாரத்தை அனுபவித்திருக்கும் ராகுல் காந்தி, அமேதி தொகுதி மக்களை அவமதித்துவிட்டு வேறு எங்கோ போட்டியிடுவதாக ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அமேதி மக்கள் இதனை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் ஸ்மிருதி இரானி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com