’’கைச்சின்னத்திற்கு வாக்களியுங்கள்’’ - காங்கிரஸுக்கு ஓட்டுக்கேட்ட பாஜகவின் சிந்தியா

’’கைச்சின்னத்திற்கு வாக்களியுங்கள்’’ - காங்கிரஸுக்கு ஓட்டுக்கேட்ட பாஜகவின் சிந்தியா
’’கைச்சின்னத்திற்கு வாக்களியுங்கள்’’ - காங்கிரஸுக்கு ஓட்டுக்கேட்ட பாஜகவின் சிந்தியா

மத்திய பிரதேச மாநிலத்தில் 28 தொகுதிகளில் நவம்பர் 3-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தலைவர்கள் தீவிரமாக பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் மார்ச் மாதம் காங்கிரஸிலிருந்து பிரிந்து பாஜகவில் இணைந்த ஜோதிராதித்யா சிங், குவாலியர் மாவட்டத்தில் தப்ரா தொகுதியில் போட்டியிடும் இமார்தி தேவிக்கு ஆதரவாக நேற்று பிரசாரத்தில் களமிறங்கினார்.

அப்போது, பழக்கதோஷத்தில், கைகளை உயர்த்தி, ‘’தப்ரா தொகுதி மக்களே, என் இனிய மக்களே... வருகிற 3ஆம் தேதி பஞ்சா(கை) பட்டனை அழுத்த மறந்துவிடாதீர்கள்’’ என்று கூறியிருக்கிறார். பிறகு நிலைமையை சுதாரித்து தன்னைத் திருத்திக்கொண்டாலும், கூடியிருந்த மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். வேட்பாளாரன இமார்தி தேவியும் சிரிக்கும் அந்த வீடியோ இணையங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் பேசிய அவர், ‘’கமல்நாத் அசோக்நகருக்கு வந்தபோது என்னை நாய் என்று அழைத்தார். ஆம், நான் நாய்தான். ஏனென்றால் மக்கள்தான் என் எஜமான். நான் நாய். நாய்தான் தன் எஜமானை பாதுகாக்கும்’’ என்று அந்தக் கூட்டத்தில் பேசியுள்ளார்.

அதற்கு காங்கிரஸும், ‘’சிந்தியா ஜி, நவம்பர் 3ஆம் தேதி கை பட்டனைத்தான் அழுத்தவேண்டும் என்பதை மத்திய பிரதேச மக்களும் உங்கள்மூலம் உறுதிப்படுத்திக் கொண்டார்கள்’’ என பதிலளித்துள்ளது.

காங்கிரஸிலிருந்து பிரிந்து பாஜகவில் இணைந்த 22 எம்.எல்.ஏக்களில் இமார்தி தேவியும் ஒருவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com