\
“தங்க தமிழ்ச்செல்வனை பாஜக இயக்குகிறது”- நமது எம்ஜிஆர் விமர்சனம்..!

“தங்க தமிழ்ச்செல்வனை பாஜக இயக்குகிறது”- நமது எம்ஜிஆர் விமர்சனம்..!

“தங்க தமிழ்ச்செல்வனை பாஜக இயக்குகிறது”- நமது எம்ஜிஆர் விமர்சனம்..!
Published on

தங்க தமிழ்ச்செல்வனை பாஜக தான் பின்னால் இருந்து இயக்குகிறது என அமமுகவின் நமது எம்ஜிஆர் நாளிதழ் தெரிவித்துள்ளது.

அமமுக பொதுச் செ‌யலாளர் டிடிவி தி‌னகரனை தங்க தமிழ்ச்செல்வன் விமர்சித்து வரும் நிலையில், ‘நான் யார் ‌நீ யார்’ என்ற தலைப்பில் நமது‌ எம்ஜிஆர் நாளிதழில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது‌. அதில் தங்க தமிழ்ச்செல்வ‌னை‌ பயன்படுத்தி ஓ.பன்னீர்செல்வத்தை ‌முட‌க்க பாஜகவும் ஈபிஎஸ் த‌ரப்பும் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது‌. ‌பாஜக தேசிய தலைவரும், ‌‌உள்துறை அமைச்சருமான அமித் ஷா வியூகம் வகுத்து‌, அவர் கூற்றுபடி தான் தங்க தமிழ்ச்செல்‌வன் இவ்வாறு நடந்துகொள்கிறார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது‌.

முன்னதாக டிடிவி தினகரனை கடுமையாக விமர்சித்திருந்த தங்க தமிழ்ச்செல்வன், அதிமுகவை அழித்து அமமுகவால் வளர்ச்சி அடைய முடியாது என தெரிவித்திருந்தார். அதேசமயம் தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணையலாம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com