பாஜக அசைவத்துக்கு எதிரான கட்சி இல்லை: நானும் அசைவம்தான்!

பாஜக அசைவத்துக்கு எதிரான கட்சி இல்லை: நானும் அசைவம்தான்!

பாஜக அசைவத்துக்கு எதிரான கட்சி இல்லை: நானும் அசைவம்தான்!
Published on

பாஜக அசைவத்துக்கு எதிரான கட்சி இல்லை என்றும், தான் அசைவ உணவு பழக்கம் உள்ளவன் தான் என்றும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

மாட்டிறைச்சி விவகாரத்தைப் பற்றி பத்திரிகையாளர்களிடம் பேசிய வெங்கையா நாயுடு, “கால்நடை விற்பனைக்கு கொண்டுவந்த கட்டுபாடுகளை உணவு பழக்கத்தோடு ஒப்பிட்டு எதிர்க்கட்சிகள் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டு முடிகின்றனர். என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பது தனிநபர்களின் விருப்பம். நாட்டில் உள்ள அனைவரையும் பாஜக சைவபழக்கத்திற்கு மாற்ற முயற்சிப்பதாக அறிவில்லாத சிலர் கூறிவருகின்றனர். நான் அசைவ உணவு பழக்கம் உள்ளவன் தான். ஆனால் பாஜக தலைவராக இருக்கிறேன்.

முன்னதாக, மாட்டிறைச்சி விவகாரத்தால் மேகாலயாவில் இரண்டு பாஜக தலைவர்கள் கட்சி விட்டு விலகிவிட்டனர். பாஜக வடகிழக்கு மாநில மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லை. பழங்குடி மக்களின் உணவு பழக்கத்தை பாஜக அவமதிக்கிறது. மாட்டிறைச்சி என்பது வடகிழக்கு மாநில மக்களின் கலாச்சாரத்தில் உள்ளது என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com