தமிழகத்தில் ஆட்சியை காப்பாற்றவே, குடியரசுத் தலைவர் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரை அதிமுக அணிகள் ஆதரிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளர். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாரதிய ஜனதாதான் அதிமுகவை வழிநடத்துவதாகவும் குறைகூறினார். இந்தி இருக்கலாம் ஆனால் இந்தி திணிப்பு கூடாது என்றுகூறிய நல்லகண்ணு, கீழடி அகழாய்வு பொருட்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். முன்னதாக காமராஜர் அரங்கில் நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு மற்றும் கீழடி பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்று நல்லகண்ணு உரையாற்றினார்.