\
இலவச ஆம்புலன்ஸ் சேவை: சென்னையில் தொடங்கி வைத்தார் பியூஷ் கோயல்

இலவச ஆம்புலன்ஸ் சேவை: சென்னையில் தொடங்கி வைத்தார் பியூஷ் கோயல்

இலவச ஆம்புலன்ஸ் சேவை: சென்னையில் தொடங்கி வைத்தார் பியூஷ் கோயல்
Published on: 

ஏழை மக்களுக்கான ஆம்புலன்ஸ் சேவையை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்.

இன்று பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் நாடு முழுவதும் பாஜக தொண்டர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பிரதமரின் பிறந்தநாள் விழாவையொட்டி மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் வருகை தந்திருந்தார். தேனாம்பேட்டையில் நடந்த இலவச மருத்துவ முகாமில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்பட்டது. அதோடு இலவச ஆம்புலன்ஸ் சேவையையும் அவர் தொடங்கி வைத்தார். அவருடன் மத்திய இணை அமைச்சர் மனோஜ் சிங்ஹா உடன் இருந்தார். இவ்விழாவில் பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.

இதற்கு முன்பு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அணு உலையை எதிர்க்கும் மாநிலத்திற்கு மற்ற மாநிலத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்படமாட்டது என கூறியிருந்தது பெரிய சர்ச்சையாக வெடித்தது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com