திருமாவளவனைக் கண்டித்து தனி ஆளாக போராட்டம் செய்த பாஜக பெண் நிர்வாகி!
விசிக தலைவர் திருமாவளனை கண்டித்து பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் யாரும் இன்றி தனி ஆளாக போராட்டம் நடத்திய பாஜக மாவட்ட பெண் நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் திருப்பூர் மாவட்ட மகளிரனி செயலாளராக பதவி வகித்துவரும் கீர்த்திகா தலைமையில் இன்று மாலை வி.சி.க தலைவர் திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறி, அவரை கண்டித்து கண்டன ஆர்பாட்டத்திற்க்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தது
இந்நிலையில், போராட்டத்திற்கு பா.ஜா.க வினர் யாரும் வராத நிலையில் தனி ஆளாக கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ”திருமாவளவன் என்ற கடவுள் பெயரை வைத்துகொண்டு தவறாக பேசிவருவதை உடனடியாக நிறுத்தவேண்டும்” என்றதோடு, மனு தர்ம நூலில் நல்ல முறையில் வாழும் முறைபற்றி கூறப்பட்டுள்ளதாகவும் திருமாவளவன் மீது குடியரசு தலைவரிடம் புகார் கொடுக்கபடும் எணவும் தெரிவித்தார்.