புதுச்சேரி தேர்தல்: பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

புதுச்சேரி தேர்தல்: பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு
புதுச்சேரி தேர்தல்: பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் “விண்ணப்பித்த 15 நாட்களில் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும். புதுச்சேரியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைத்து வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். புதுச்சேரி மாநிலத்திற்கு தனி கல்வி வாரியம் அமைக்கப்படும். புதுச்சேரியில் மழலையர் முதல் உயர்கல்விவரை பெண்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும். புதுச்சேரியில் 2.5 லட்சம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

மேலும், “பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி பாஜக. பெண்களுக்கு மரியாதை கொடுக்கக்கூடிய கட்சி. அதனால்தான் என் வீட்டில் கூட யாரும் என்னை தடுத்து நிறுத்தவில்லை. பெண்களின் வளர்ச்சிக்கு ஸ்தானம் கொடுக்கக்கூடிய கட்சியாக இருப்பதால்தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன்.

என்னை பெண் இரண்டாவது நிதியமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் அந்த முதல் பெண் யார்? இந்திராகாந்தி இருந்தார். அவர் பிரதமராக இருந்தபோது நிதியமைச்சராகவும்,  பாதுகாப்பு துறை அமைச்சராகவும் இருந்தார். அதை நான் மதிக்கிறேன். ஆனால் இப்போது பிரதமர் மோடி எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்தார். இதுபோன்று பெண்களை புரிந்த கட்சி பாஜக” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com