சிறு, குறு விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம்.. பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

சிறு, குறு விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம்.. பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

சிறு, குறு விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம்.. பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு
Published on

மக்களவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் 75 சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் பாஜகவின் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டனர். அதில் 75 சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. முக்கியமானவைகள்..

  • விவசாயிகளுக்கு வட்டியில்லாத கிரெடிட் கார்டுகள் வழங்கப்படும்
  • அனைத்து மாநிலங்களுடனும் ஆலோசித்து ஜிஎஸ்டி நடைமுறைகள் இன்னும் எளிமையாக்கப்படும்
  • 2022-ஆம் ஆண்டுக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் வீடு கட்டித்தரப்படும்
  • 60 வயதான சிறு, குறு விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
  • கிராமப்புற வளர்ச்சிக்காக ரூ.25 லட்சம் கோடி ஒதுக்கப்படும்
  • சிசான் சம்மான் திட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6000 உதவித்தொகை வழங்கப்படும்
  • 5 ஆண்டுகள் வரை விவசாயிகளுக்கு ரூ 1  லட்சம் வரை வட்டியிலா கடன் வழங்கப்படும்
  • முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்படும்
  • மத நம்பிக்கைகளை பாதுகாக்க அரசியல் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்
  • நாடு முழுவதிலும் புதிதாக 75 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்
  • நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த நடவடிக்கை
  • விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க உரிய நடவடிக்கை
  • நவீன கால சூழல்களை கருத்தில் கொண்டு பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும்
  •  நதிகள் இணைப்பிற்கு தனி ஆணையம் உருவாக்கப்படும்
  • சட்ட விதிகளுக்கு உட்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com