பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள்: சொன்னதும்; செய்ததும் என்ன?

பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள்: சொன்னதும்; செய்ததும் என்ன?
பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள்:  சொன்னதும்; செய்ததும் என்ன?

ஊழல் ஒழிப்பு-1

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் பதவிக் காலம் இந்த மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. ஆகவே விரைவில் நாடாளுமன்றத் தேர்தலை நாம் சந்திக்க உள்ளோம். பொதுவாக ஒவ்வொரு முறை தேர்தலின் போதும் அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிடுவது வழக்கம். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் அவர்கள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா என்பது மிகப்பெரிய கேள்வி. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ஊழல் ஒழிப்பு தொடர்பாக பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் என்ன? அவை எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன ?  

ஊழலை ஒழிக்க பாஜக தனது தேர்தல் வாக்குறுதியில் சொன்னது என்ன? அதை முதலில் பார்ப்போம். ஊழல் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் அதிகப்படுத்துவது. ஊழலை குறைக்க தொழில்நுட்பம் சார்ந்த மின்னணு நிர்வாகத்தை (e-governance) ஏற்படுத்துவது. அதேபோல் வரிகளை ஒழுங்கு முறைப்படுத்துதல் மற்றும் அரசு சார்ந்த நிர்வாக விதிகளைச் சீரமைப்பது. கருப்புப் பணத்தை அறவே ஒழிப்பது மற்றும் வெளிநாடுகளிலுள்ள கருப்புப் பணத்தை இந்தியாவிற்கு கொண்டுவருவது போன்றவற்றை வாக்குறுதிகளாக பாஜக தெரிவித்திருந்தது. 

2014ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவிக்கு வந்தவுடன் ஊழலுக்கு எதிராக சிறப்பு புலனாய்வு அமைப்பை ஒன்றை எற்படுத்தியது. இந்த அமைப்பு உச்சநீதிமன்றத்தின் ஆணைக்கேற்ப ஊழல் தொடர்பான விசாரணையில் ஈடுபடும் அமைப்பு. அதேபோல் கடந்த 2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இந்த நடவடிக்கையின் முலம் கருப்பு பணப் புழக்கத்தை தடுக்க முற்சித்தது. மேலும் 2017 ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்தியது. இந்த வரி விதிப்பின் மூலம் கலப்புப் பொருளாதாரத்தை முறைப்படுத்த முயன்றது. இவை மட்டுமின்றி பிற நாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தைக் கண்டறிவதற்குப் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் மேற்கொண்டது. 

மத்திய அரசின் நடவடிக்கைகள் ஒரளவு பயன் தந்த நிலையில் ஊழலை முற்றிலும் தடுக்க முடியவில்லை. உதாரணமாக, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் முலம் கருப்பு பணப் புழக்கத்தை குறைந்த அளவிலே தடுக்க முடிந்தது. அதேபோல் சரக்கு மற்றும் சேவை வரியின் முலம் கலப்புப் பொருளாதாரத்தை முறைப்படுத்தாமல் வழக்கமாக நடந்து வந்த மொத்த வர்த்தகத்தையே அது நிலைகுலைய செய்தது என்று பலரும் குற்றச்சாட்டை முன் வைத்தனர். பல நாடுகளிலிருந்து வந்த கருப்பு பணம் பற்றிய தகவல்களை மத்திய அரசு வெளியிடாததால் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஊழல் தடுப்பில் எந்த அளவுக்கு உதவியது என்பதை அறியமுடியவில்லை என்று பொருளாதாரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். மேலும் ஊழலை தடுக்க மக்களின் வங்கிக் கணக்கில் மானியத்தை நேரடியாக அரசு செலுத்த முன்வந்தது. ஆயினும் அதிலும் போலி வங்கிக் கணக்குப் போன்ற பிரச்னைகள் எழுந்தன.  

மத்திய அரசு ஒருபுறம் ஊழலை தடுக்க போராடும் நிலையில் மற்றொரு புறம் மத்திய அரசின் கீழ் உள்ள அமைப்புகளில் ஊழல் நடந்ததாக வழக்குகள் பதிவாகி உள்ளன. ஆகவே அதனை காரணம் காட்டி சிலர் இந்த முயற்சிகளை விமர்சித்து வருகின்றன. நாட்டின் உயரிய புலனாய்வு அமைப்பான மத்திய புலனாய்வு அமைப்பில் ஊழல் நடந்திருப்பதாக வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனால் மத்திய அரசு ஊழல் தடுப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்பதை பலரும் முன் வைக்கின்றனர். 

இதுவரை ஊழல் தடுப்பிற்கான தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை பாஜக நிறைவேற்ற முயன்றிருந்தாலும் அவை அனைத்தும் ஊழல் தடுப்பில் ஒரு சிறிய தொடக்கமே. ஆனால் கடக்க வேண்டிய சவால்கள் இன்னும் அதிகம் இருப்பதாகவே பல பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதை நோக்கி முன்னேற, பாஜக இன்னும் பல நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை அது கண்டடைய வேண்டியும் உள்ளது.  

ஓகே, பெண்கள் முன்னேற்றத்தில் பாஜக வாக்குறுதிகள் என்ன? அடுத்த பதிவில் அதனை பற்றி எழுதுவோம். 

அதுவரை வெயிட் அண்ட் சி...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com