கோவா: மனோகர் பாரிக்கரின் மகனை வீழ்த்திய பாஜக வேட்பாளர்!

கோவா: மனோகர் பாரிக்கரின் மகனை வீழ்த்திய பாஜக வேட்பாளர்!

கோவா: மனோகர் பாரிக்கரின் மகனை வீழ்த்திய பாஜக வேட்பாளர்!
Published on

உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா என ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. இந்த ஐந்து மாநிலங்களில் பஞ்சாப் நீங்கலாக மற்ற இடங்களில் பாஜக ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில், கோவா மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பால் மனோகர் பாரிக்கரை வீழ்த்தியுள்ளார் பாஜக வேட்பாளரான அடனாசியோ மான்செரேட் (Atanasio Monserrate).

பனாஜி சட்டப்பேரவை தொகுதியில் பாஜகவில் சீட் கொடுக்காத காரணத்தால் சுயேட்சையாக போட்டியிட்டார் உத்பால். அவரை வீழ்த்தியுள்ளார் பாஜக வேட்பாளர் அடனாசியோ. வெறும் 716 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் இந்த வெற்றியை பெற்றுள்ளார். 

கடந்த 2002 முதல் தேர்தலில் போட்டியிட்டு வருகிறார் அடனாசியோ. பாஜக, காங்கிரஸ் என மாறி மாறி அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கடந்த 2017 தேர்தலில் மட்டுமே அவர் தோல்வியை தழுவியுள்ளார். மாநில அரசில் அமைச்சராகவும் இயங்கியவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com