\
'தாமரை மலரட்டும்... தமிழகம் வளரட்டும்' பாடலுக்கு குத்தாட்டம் ஆடிய அண்ணாமலை

'தாமரை மலரட்டும்... தமிழகம் வளரட்டும்' பாடலுக்கு குத்தாட்டம் ஆடிய அண்ணாமலை

'தாமரை மலரட்டும்... தமிழகம் வளரட்டும்' பாடலுக்கு குத்தாட்டம் ஆடிய அண்ணாமலை
Published on

கரூரில் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு வாக்கு சேகரிக்க வந்த காயத்ரி ரகுராம் நாட்டியமாடி வாக்கு சேகரித்தார். உற்சாகமான வேட்பாளர் அண்ணாமலையும் பொதுமக்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டது பொதுமக்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிடுகிறார். தொகுதி முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வரும் அவருக்கு வாக்குக் கேட்டு இன்று திரைப்பட நடன மாஸ்டர் வாக்கு சேகரித்தார்.

புஞ்சை காளகுறிச்சி, நஞ்சை காளகுறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காயத்ரி ரகுராம் வேட்பாளர் அண்ணாமலையுடன் சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது நஞ்சைகாளகுறிச்சி பகுதியில் பொதுமக்கள் உற்சாகமாக நடனமாடி வரவேற்றனர். அதைக்கண்ட காயத்ரி ரகுராமுக்கு தான் டான்ஸ் மாஸ்டர் என்பது நினைவுக்கு வர, வேகமாக வேட்பாளரின் வாகனத்திலிருந்து இறங்கிய அவர், பொதுமக்களுடன் சேர்ந்து ஒரு ஆட்டம் போட்டதைப் பார்த்து பொதுமக்கள் அசந்து போயினர்.

பொதுமக்களின் ஆட்டத்தையும், காயத்ரி ரகுராமின் ஆட்டத்தையும் பார்த்த வேட்பாளர் அண்ணாமலை தானும் உற்சாகமாகி பொதுமக்களுடன் சேர்ந்து ஆடிய ஆட்டத்தை பார்த்து பொதுமக்கள், ‘’போலீஸ் அதிகாரி கைவசம் நிறைய திறமை வச்சு இருக்காரு’’ என கமெண்ட் அடித்து சென்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com