"ஐக்கிய முற்போக்கு கூட்டணியா? ; அதெல்லாம் இப்போது இல்லை" – மம்தா பானர்ஜி

"ஐக்கிய முற்போக்கு கூட்டணியா? ; அதெல்லாம் இப்போது இல்லை" – மம்தா பானர்ஜி
"ஐக்கிய முற்போக்கு கூட்டணியா? ; அதெல்லாம் இப்போது இல்லை" – மம்தா பானர்ஜி

மாநிலக் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால் பாரதிய ஜனதா கட்சியை எளிதில் வீழ்த்தலாம் என சரத் பவார் மற்றும் சிவசேனா கட்சி தலைவர்களை சந்தித்தபின் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 3 நாள் பயணமாக மும்பை சென்றுள்ள நிலையில் அங்கு சிவசேனா கட்சியின் தலைவர்கள் ஆதித்ய தாக்கரேவையும் சஞ்சய் ராவத்தையும் சந்தித்து பேசினார். இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரையும் மம்தா சந்தித்தார். அதன் பின் நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய மம்தா, தற்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற ஒன்று இல்லை என தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளுக்கு ஆலோசனை கூற பொது சமூகத்தில் உள்ள சிலரைக் கொண்டு குழு ஒன்றை அமைக்க காங்கிரஸிடம் தான் யோசனை கூறியதாகவும், ஆனால் அது ஈடேறவில்லை என்றும் தெரிவித்தார். தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான அணிக்கு தலைமை தாங்குவீர்களா என கேட்டதற்கு, தான் ஒரு சாதாரண தொண்டர் என்றும் அப்பணியிலேயே தொடர விரும்புவதாகவும் மம்தா குறிப்பிட்டார். அரசியலில் உள்ளவர்கள் தொடர்ச்சியாக அப்பணியை கவனிக்க வேண்டும் என்றும் பெரும்பாலான நாட்கள் வெளிநாடுகளில் இருப்பது சரியல்ல என்றும் மம்தா தெரிவித்தார்.

மம்தாவின் இப்பேச்சு ராகுல் காந்தி மீதான மறைமுக விமர்சனமாக பார்க்கப்படுகிறது. தேசிய அளவில் காங்கிரஸிற்கு மாற்றாக திரிணமூல் உருவெடுக்க முனைவதாக தகவல்கள் வெளியாகும் நிலையில் மம்தாவின் மும்பை சந்திப்புகள் முக்கியத்துவம் மிக்கதாக பார்க்கப்படுகிறது. பின்னர் சரத்பவாருடன் செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜியிடம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. "ஐக்கிய முற்போக்கு கூட்டணியா?; அதெல்லாம் இப்போது இல்லை" என்று கூறினார்.

இது தொடர்பாக, காங்கிரஸ் இல்லாமல் பாஜகவை தோற்கடிக்கமுடியும் என நினைப்பது வெறும் கனவு, இந்திய அரசியலின் எதார்த்தம் அனைவருக்கும் தெரியும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com