\
உ.பி. சட்டசபை தேர்தல் - கூட்டணியை அறிவித்தது பாஜக

உ.பி. சட்டசபை தேர்தல் - கூட்டணியை அறிவித்தது பாஜக

உ.பி. சட்டசபை தேர்தல் - கூட்டணியை அறிவித்தது பாஜக
Published on: 

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் அப்னா தள் மற்றும் நிஷாத் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதாக பாஜக அறிவித்துள்ளது.

டெல்லியில் நடந்த பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டத்திற்கு பிறகு உத்தரப்பிரதேச தேர்தல் கூட்டணி தொடர்பாக அறிவித்த அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடும்" என அறிவித்தார்.

403 தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்கு, பிப்ரவரி 10-ம் தேதி முதல், மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com