\
பாஜகவுடன் அதிமுக கூட்டணி: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பாஜகவுடன் அதிமுக கூட்டணி: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பாஜகவுடன் அதிமுக கூட்டணி: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
Published on

எதிர்காலத்தில் பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

மதவாத கட்சிகளுடன் அதிமுக என்றும் கூட்டணி சேராது என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருந்தார். இந்நிலையில், விருதுநகரில் செய்தியாளர்களின் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,  வருங்காலத்தில் பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார். மேலும், அரசியலில் எதுவும் நடக்கும் என்றும் யார் யாருடன் வேண்டுமென்றாலும் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் செல்லூர் ராஜுவின் கருத்திற்கு எதிராக முற்றிலும் மாறுப்பட்ட கருத்தை ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com