பாஜக, பாமக தொகுதி பட்டியல் இன்று வெளியீடு

பாஜக, பாமக தொகுதி பட்டியல் இன்று வெளியீடு

பாஜக, பாமக தொகுதி பட்டியல் இன்று வெளியீடு

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாஜக, பாமகவின் தொகுதி பட்டியல் இன்று வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா, பாமக ஆகிய கட்சிகள், பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்வது குறித்து அதிமுக தலைமையுடன் விடிய விடிய பேச்சுவார்த்தை நடத்தின.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா 20 இடங்களிலும் பாமக 23 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவு செய்ய, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் நேற்றிரவு பாரதிய ஜனதா முதலில் பேச்சுவார்த்தை நடத்தியது.

இதையடுத்து பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், “2 மணி நேரத்துக்கும் மேல் நடந்த பேச்சுவார்த்தையில், சுமுக உடன்பாடு எட்டப்பட்டது. பாஜக போட்டியிடும் தொகுதிகள் உறுதியாகி விட்டது. இன்று தொகுதிகள் பட்டியல் வெளியிடப்படும்” என்றார்.

பின்னர், பாமக சார்பில் பேச்சுவார்த்தை நடந்தது. அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர், ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே.மணி, “அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுவிட்டன. தொகுதி பட்டியல் இன்று வெளியாகும்” எனத் தெரிவித்தார்.

இதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சியும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com