பாதுகாப்பு வீரர்களின் தியாகத்தில் அரசியல் செய்கிறார் பிரதமர் - முதல்வர் குமாரசாமி

பாதுகாப்பு வீரர்களின் தியாகத்தில் அரசியல் செய்கிறார் பிரதமர் - முதல்வர் குமாரசாமி

பாதுகாப்பு வீரர்களின் தியாகத்தில் அரசியல் செய்கிறார் பிரதமர் - முதல்வர் குமாரசாமி
Published on

ராணுவ வீரர்களின் தியாகத்தைப் பேசி பிரதமர் மோடி அரசியல் செய்கிறார் என கர்நாடக முதல்வர் குமாரசாமி விமர்சித்துள்ளார். 

மத்தூரூ என்ற பகுதியில் பரப்புரை மேற்கொண்ட அவர், எல்லையில் இருக்கும் பாதுகாவலர்கள் செல்வந்தவர்களின் வாரிசுகள் இல்லை என்றும் ஒரு கைபிடி உணவுக்குக் கூட வழியில்லாதவர்களின் வாரிசுகளே எல்லை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என குமாரசாமி தெரிவித்தார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடியோ ராணுவ வீரர்களின் தியாகச் செயலை சுட்டிக்காட்டி அரசியல் செய்கிறார் எனக் கடுமையாகச் சாடினார். 

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள், பால்கோட்டில் இந்திய ராணுவத்தின் பதிலடி குறித்து தேர்தல் பரப்புரையில் பேசிவரும் நரேந்திர மோடிக்கு பதில் தரும் வகையில் குமாரசாமி இவ்வாறு பேசியுள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கிறது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com